மொத்த கடல் நீரை விட 3 மடங்கு அதிக நீர் பூமிக்கு அடியில் கண்டுபிடிப்பு

மொத்த கடல் நீரை விட 3 மடங்கு அதிக நீர் பூமிக்கு அடியில் கண்டுபிடிப்பு கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது பிரதிமொத்த கடல் நீரை விட 3 மடங்கு அதிக நீர் பூமிக்கு அடியில் கண்டுபிடிப்பு

நாம் வாழும் பூமியில் நிலப்பரப்பை விட கடல் பகுதி 3 மடங்கு அதிகம் ஆகும். ஆனால் மொத்த கடல்நீரை விட 3 மடங்கு அதிக நீர் பூமிக்கு அடியில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். 

நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் ஸ்டீவ் ஜேக்கப்சன் மற்றும் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிலநடுக்க ஆய்வாளர் பிராண்ட்சன் சாமண்டிட் ஆகியோர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்து உள்ளது. இந்த நீர் பகுதி வட அமெரிக்காவில் பூமிக்கு அடியில் 400 மைல் ஆழத்தில் இருப்பதாகவும், ஆனால் அது வழக்கமான திரவ நிலையில் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். 

மேல் பகுதியில் உள்ள நீர் பூமிக்குள் இறங்கியதாலும், பூமியின் அடியில் உள்ள பாறை தட்டுகள் உருகியதன் காரணமாகவும் இந்த நீர் பகுதி உருவாகி இருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :