தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரபுக் கல்லூரி சமுக நீரோட்டத்தில் 40 வருடங்கள் விசேட கருத்தரங்கும்



(அஸ்ரப் ஏ சமத்)

தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரபுக் கல்லூரி சமுக நீரோட்டத்தில் 40 வருடங்கள் விசேட கருத்தரங்கும் தெல்தோட்டை பிரதேச கல்வி மற்றும் சமுக அபிவிருத்தியில் சமுகப் பொறுப்பை உறுதி செய்தல் எனும் முழுநாள் செயலமவொன்று இன்று கொழும்பு 7 ல் உள்ள விளையாட்டு அமைச்சின் ரோஸ் கோஸ் கட்டிடத்தில் நடைபெற்றது.

இக் கருத்தரங்கு தெல்தோட்டை மஹ்பலுல் உலமா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி ஏ.ஆர். அப்துல் ரசாக் தலைமையில் நடைபெற்றது. பிரதேச அபிவிருத்தியில் சமுக பங்களிப்பை உறுதி செய்தல் என்ற தலைப்பில் சாபீர் மொஹமட் காசீம், 40 ஆண்டு நிறைவும், பிரதேச அபிவிருத்தி என்ற தலைப்பில் தேசிய சூரா கவுன்சிலின் செயலாளர் இஸ்மாயில் அசீஸ், ஜாமிஆ நளீமியாவின் சிரேஸ்ட விரிவுரையாளர் 
அஷ;ஷக் எஸ்.எச்.எம் பழீல் - இஸ்லாத்தின் பார்வையும் சமுக ஈடுபாடும் என்ற தலைப்பில் விரிவுரைகள் நடைபெற்றன. 

தெல்தோட்டையில் இருந்து 200 பேர் கலந்து கொண்டனர்.இங்கு உரையாற்றிய – அஷ;Nஷக் பழீல் - இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்கள், குர்ஆண், மற்றும் கலை கலாச்சாரம் வாழ்க்கை முறை மற்றும் முஸ்லீம்களின் வியாபாரம் போற்றவற்றுக்கு எதிராக இந்த நாட்டில் கடந்த 2 வருடங்களுக்குள் பாரிய அளவிலான பிரச்சினைகள் நடைபெற்று வருகின்றன. முஸ்லீம்களுக்கெதிராக சிங்கள வெப்தளங்கள், 20க்கும் மேற்பட்ட சிங்கள நூல்கள் வெளிவந்துள்ளன. நாளாந்த பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக முஸ்லீம்களை இழிவுபடுத்தி விவாதங்கள் நடைபெறுகின்றன. இச் செயல்கள் முலம் பெரும்பாண்மைஇனங்களிடையே முஸ்லிம்கள் பற்றி இனத் துவேசம் பரப்ப்பட்டு வருகின்றன. 

ஆனால் இதுவரையும் இதற்கு எதிராக முஸ்லீம்கள் பக்கத்தில் இருந்து அவர்கள் வெளியீட்ட நூல்களுக்கு மறுப்பு நூலோ எதிர்ப்போ வரவில்லை. மியண்மாரில் வாழும் முஸ்லீம்களுக்கு எவ்வாறு வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதோ அவ்வாறனதொரு நிகழ்வு இங்கும் நடைபெறுமோ என அச்சம் கொள்ள வேண்டிய நிலையில் தான் நாம் இங்கு 
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.நபி (ஸல்) அலை வசல்லம் அவர்களுக்குக் கூட எதிராக ஒருவர் வசை பாடி கவிதை பாடியதற்காக அதற்கு நிகராக 4 கவிஞர்களைக் கொண்டு வந்து கவி பாடச் சொன்னவர்கள் எமது நபி (ஸல்) அவர்கள். ஆகவேதான் நமது மதத்திற்கும் மற்றும் இனத்திற்கும் எதிராக இந்த நாட்டில் கொண்டுவரும் ஒவ்வொரு அசைவுக்கும் நாம் பதில் அளிக்க வேணடியவர்களாக உள்ளோம் ஆனால் நமது சமுகத்தில் ஒருத்தரும் முன்வருவதில்லை. அதற்காக நாம் ஒருபோதும் மௌனியாகவோ அல்லது 
ஒதுங்கியிருப்பது நல்லதல்ல. அஷ;Nஷக் பழில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :