றியாஸ் ஆதம்-
40வது தேசிய விளையாட்டு விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற கிர்க்கட் சுற்றுப்போட்டி 2014.06.29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் கிழக்குமாகாண அணியும் சப்ரகமுவ மாகாண அணியும் மோதிக்கொண்டன. ஆணிக்கு 11பேர் கொண்ட 15ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சப்ரகமுவ அணி 12ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 31ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
32ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி 5ஓவர்களில் ஒரு விக்கட்டினை இழந்து 35ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
இக்கிரிக்கட் சுற்றுப்போட்டியின் சிறந்த ஆட்ட நாயகனாக கிழக்குமாகாண அணி சார்பாக விளையாடிய என்.நிக்சி அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.
40வது தேசிய விளையாட்டு விழா கிரிக்கட் போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரகடனப்படுத்தி அட்டாளைச்சேனை பிரதேச அணி பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் பங்குபற்றி கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கும், அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜூதீன் ஆகியோருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு கழகங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டினையும் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment