இறந்த சிறுமியை 5 மாதங்களாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த தாய்

மெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் ஆம்பர் கியிஸ். இவருடைய மகள் அய்கானா (9வயது) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் மூச்சுதிணறலால் இறந்துவிட்டார். 

மகளின் உடலை என்ன செய்வது என்று யோசித்த அவர், சிறுமியை ஒரு துணியால் சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டார். 

இவருடைய மற்ற மகள்கள் இருவரும் அந்த சமயம் பள்ளிக்கு சென்றுவிட்டதால் விஷயம் வெளியே தெரியவில்லை. 

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பக்கத்துவீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் இவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குளிர்சாதனப் பெட்டியில் துணியால் சுத்தப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த பொலிஸார் ஆம்பர் கியிஸ்யிடம் விசாரித்தனர். அவர் தன் குழந்தை இறந்தவுடன் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும், மற்ற குழந்தைகளுக்கு தெரிந்தால் வேதனைப்படுவார்கள் என்பதால் செல்லாமல் உடலை மறைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் தனது சிறுமி குறித்து யாராவது கேட்டால் பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டதாககூறி வந்திருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்ணை கடுமையாக எச்சரித்த பொலிஸார் சடலத்தைப் புதைக்க ஏற்பாடு செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :