அகில இலங்கை வை.எம்.எம்.ஏ இயக்கத்தின் 64ஆவது பேராளர் மாநாடும் வருடாந்த பொதுக் கூட்டமும்



பாலமுனை ஸிறாஜ்-
கில இலங்கை வை.எம்.எம்.ஏ இயக்கத்தின் 64ஆவது பேராளர் மாநாடும் வருடாந்த பொதுக் கூட்டமும் அண்மையில் மடவளை மதீனா தேசிய பாடசாலையில் மர்ஹீம் அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் மிக கோலகலமாக இடம்பெற்றது.

அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவர் கே.எம்.டீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக பிரதம அதிதியாகவும்.சிறிங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் உற்பத்திதிறன் ஊக்கவிப்பு அமைச்சருமான அல்ஹாஜ் பசீர்சேகுதாவூத் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் இறுதியாக (2014—2015)அண்டுக்கான நிருவாகத் தெரிவொன்றும் அங்கு இடம்பெற்றது.

இதில் தலைவராக கொழும்பைச் சேர்ந்த எம்.ரீ;.தாஸிம், செயலாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.என்.எம்.நபீல், பொருளாளராக மடவளையைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.றிஸ்னி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் போது அமைச்சர்களின் சேவையினைப பாராட்டி வை.எம்.எம்.ஏ.அமைப்பினால் நினைவச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டதுடன ;மேலும். புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர்,செயலாளர்..பொருளாளர் ஆகியோரைப்பாராட்டி கிழக்கு மாகாணத்திலிருந்து சென்ற குழுவினர் பொன்ணாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :