ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் 6 வது மாவட்ட கிளை காரியாலயம் -



பழுலுல்லாஹ் பர்ஹான்-

ல்வி மற்றும் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு சமூகப் பணிகளை இலங்கையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வரும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை காரியாலயம் இலக்கம் 55.1 புதிய வன்னியா வீதி ,மட்டக்களப்பு எனும் முகவரியில் 26 இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை காரியாலயத்தை நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் போஷகர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜா நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

மேற்படி லைகாவின் ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் கிளைகள் இலங்கையில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,திருகோணமலை, வவுனியா ,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ,மேலும் இரண்டு கிளைகள் 26 இன்று வியாழக்கிழமை மாலையுடன் அம்பாறை ,மன்னார் ஆகிய மாவட்டங்களில் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் லைகாவின் ஞானம் அறக்கட்டளை மற்றும் லைகா மொபைல் நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் தெரிவித்தார்.

இத் திறப்பு விழா நிகழ்வில் லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் போஷகர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜா, லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதித் தலைவர் பிறேம் சிவசாமி, லைகாவின் ஞானம் அறக்கட்டளை மற்றும் லைகா மொபைல் நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் ,ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் பிரதிநிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்று திறந்து வைக்கப்பட்ட ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை காரியாலயம் ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தின் 6 வது மாவட்ட கிளை காரியாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :