அன்வர் இஸ்மாயிலின் 8வது வருட ஞாபகாத்த கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும் நாளை

அபூ இன்ஷாப்-

ம்மாந்துறையின் சேர்ந்த அமைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 8வது வருட ஞாபகாத்த கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும் விஷேட துஆப் பிராத்தனையும் நாளை (29) அஸர் தொழுகையினைத் தொடர்ந்து சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டு கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

அன்வர் இஸ்மாயில் நற்பணி மன்றத்தின் எற்பாட்டில் அவ்வமைப்பின் தலைவர் வை.பி.சலீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் சிறப்பு பயான் நிகழ்வை மௌலவி எம்.வை.எம்.மஹ்றூப் மதனி நிகழ்த்தவுள்ளதுடன், அமைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயில் ஞாபகாத்த நினைவுப் பேருரையினை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ;ட தமிழ்துறை விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா ஆற்றவுள்ளார்.

இந்த நிகழ்வில் அன்வர் இஸ்மாயிலின் குடும்ப உறப்பினர்கள், கல்விமான்கள், விரிவுரையாளர்கள் அன்வர் இஸ்மாயிலின் அதரவாளர்கள் என பெருந் தொகையினர் கலந்த கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :