பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலயத்தின் கண்காட்சி நிகழ்வு-









 சப்னி அஹமட்-
அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பாலமுனை அக்/இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் புகைப்பட,மூலிகை வகைகள், மற்றும் கைப்பணி கண்காட்சி என்பன பாடசாலையின் அதிபரும் சமூக சேவையாளருமான எஸ்.எம்.ஸாஹிர் ஹூஸைன் தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று (26.05.2014) நடைபெற்றது.

இன்றைய ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதியாக கலந்துகொண்ட அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம் ஹாஸிம், கெளரவ அதியாக கலந்துகொண்ட அட்டாளைச்சேனைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் அன்ஸில்,பி.எஸ்.ஐ இணைப்பாளர் என். இப்றாஹிம்,எஸ்.டி.சீ(SDC) செயளாலர் அனீஸ், ஏனைய பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள்,அத்துடன் இளைஞர் கழக உறுப்பினர்களினால் காட்சிக் கூடம் திறந்துவைக்கப்பட்டது. 

இக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களினால் உருவாக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன, இன்றைய காண்காட்சியை பார்வையிட பெருமளவிளான மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும்,பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இவ்வேளை இந்நிகழ்வுக்கு உதவிபுரிந்த அனைவருக்கும் பாடசாலைச்சமூகம் நன்றி தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -