போஷன் பௌர்னமி தினத்தையொட்டி அம்பாறை மாவட்ட மத்திய முகாமில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் மாபெரும் அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வு மத்தியமுகாம் லும்பினி விகாரையின் விகாராதிபதி சீலரத்ன தேரர் தலைமையில் இன்று (12) இடம்பெற்றபோது பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமாகிய றஊப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அங்கு அமைச்சர் றஊப் ஹக்கீம் பேசுகையில்,
மூவின மக்களின் ஒற்றுமைக்கு முழு இலங்கைக்கும் முன்னுதாரணமாக மத்தியமுகாம் நகரத்தை பார்க்கின்றேன். கடந்த யுத்தகாலத்தில் கூட இப்பிரதேசத்தில் வாழும் இனங்களிடையே எந்தவித பிரச்சினைகளும் வந்ததாக நான் அறியவில்லை.
தமிழ்இ முஸ்லிம்இ சிங்கள இனங்களிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்தும் நோக்குடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம், தமிழ் மக்களும் தங்களின் உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் இனமத வேறுபாடுகளை மறந்தவர்களாக இந்த போஷன் பௌர்னமி அன்னதான நிகழ்வை சிறப்பிக்க பங்கெற்றிருந்தமை பார்க்கும்போது இலங்கை மக்களிடத்தில் ஒரு இனமத வேறுபாடுகள் இல்லை என்பதை இங்கு உணரக் கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு மத்தியமுகாம் நகரில் அமைந்துள்ள லும்பினி விகாரையில் இடம்பெற்ற பொசன் பௌர்ணமி தின விருந்துபசார நிகழ்வில் கலந்து பேசுகையிலேயே மேற்கண்டவாறு ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.
இதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அஷ்ரப், அட்டாளைச்சேனை பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் என்.எல்.ஜாசீர் ஐமன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.தஜாப்தீன்இ ஏ.கே.அப்துல் சமட்இ மு.காவின் பாலமுனை மத்திய குழு செயலாளர் எம்.சதாத், அம்பாறை மாவட்ட பிரஜைகள் அமைப்பின் இணைப்பாளர் எம்.எச்.ஹம்ஸா சனூஸ் ஜே.பி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு போஷன் பௌர்னமி தினத்தையொட்டி பொதுமக்களுக்காக பௌத்த விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமாகிய றஊப் ஹக்கீம் உள்ளிட்ட அரசியல்வாதிகள் வழங்கி ஆரம்பித்து வைத்தனர்.
0 comments :
Post a Comment