தரப்படுத்தலின்படி நாடாளுமன்றில் துடிப்பாகச் சிறந்து செயற்படும் உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இறுதி இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஆளும் கட்சிக்குத் தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன உள்ளார். இவர் மிகவும் சோம்பேறியான ஆளுமை அற்ற, செயல்திறன் அற்ற ஒருவராகக் காணப்படுகிறார் எனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
தரவரிசையில் இரண்டாம் இடத்தை மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் மூன்றாம் இடத்தை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் பெற்றுள்ளனர். 31 ஆவது இடத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் முன்னணியில் உள்ளார் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment