த.நவோஜ்-
ஜூன் 12ம் திகதி சர்வதேச சிறுவர் உழைப்பு, ஒழிப்பு தினத்தையொட்டி ஜூன் 09ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரை சிறுவர் உழைப்பிற்கு எதிரான தேசிய செயற்பாட்டு வாரமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பிரகடனப்படுத்தியுள்ளது.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸின் வழிகாட்டலில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 'சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை இல்லா தொழிப்போம்' என்ற தொனிப் பொருளில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைய புதன்கிழமை வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இருந்து வாழைச்சேனை பிரதேச சபை வரை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடைபெற்றதுடன், உலக தரிசன நிறுவனத்தின் வாழைச்சேனை கிளையினால் வீதி நாடகமும் நடாத்தப்பட்டது.
பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏ.ஜே.ஷியாம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.அழகுராஜ், பிரதேச சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்களின் அங்கத்தவர்கள், இராணுவத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறுவர் உழைப்பிற்கு எதிரான சிறுவர் பாதுகாப்பு விடயங்கள் உள்ளடங்கிய விழிப்பூட்டும் துண்டுப் பிரசுரங்கள் அதிகாரிகளால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment