றவூப் ஹக்கீமின் மாயை நாடகம் இனிமேல் கிழக்கில் அரங்கேற முடியாது -அப்துஸ் ஸலாம்

எஸ்.அஷ்ரப்கான்-

திர்வரும் தேர்தல்கள் களத்திற்கு முகம் கொடுக்கும் நோக்கில் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து ஊர் ஊராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எழுச்சிக் கூட்டங்களை நடாத்தி எம்.பி. மாயை காட்டி மீண்டும் முஸ்லிம்களுடைய வாக்குகளை சூரையாட முற்படுவதை முஸ்லிம் சமூகம் இன்று அறியாமலில்லை என்றும் றவூப் ஹக்கீமின் மாயை நாடகம் இனிமேல் கிழக்கில் அரங்கேற முடியாது என ஐக்கிய தேசியக்கட்சியின் அம்பாரை மாவட்ட வி பிரிவு பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம் தெரிவித்தார்.
அன்மைக்காலமாக கிழக்கை மையப்படுத்தி முதலைக்கண்ணீர் வடித்துவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமின் நடவடிக்கைகள் குறித்து தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள எஸ்.அப்துஸ் ஸலாம் 

தொடர்ந்தும் தனதுரையில் குறிப்பிடும்போது,

கடந்த கால தேர்தல்களில் உரிமைக்காக வாக்குக் கேட்டவர்கள் தற்போது ஊருக்காக வாக்கு கேட்பதானது பெரும் கேலிக்கூத்தான விடயமாகும். 

உரிமைக்கு குரல் கொடுப்பதற்கு வாக்குகளைத்தாருங்கள் என்று வாக்குக் கேட்டவர்களால் இருந்த உரிமைகளைக் கூட பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் இந்த கைசேதத்தை மூடி மறைப்பதற்கு தற்போது ஊருக்கு எம்.பி பெறுவதற்காக வாக்களியுங்கள் என்று தற்காலத்தில் ஊர் ஊராக மேடை போட்டு முழங்குகின்ற அரசியல்வங்கரோத்தை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரங்கேற்ற நினைப்பது இவர்களின் அரசியல் வங்கரோத்து நிலையாகும்.

தற்போதைய பாராளுமன்றங்களிலும்இ மாகாண சபைகளிலும் அரசாங்கத்தின் முக்கிய பங்காளியாக மு.கா இருந்தும் 18 வது திருத்தச் சட்டம் போன்ற முக்கிய பிரேரணைகளுக்கு எதிராக வாக்களித்தும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. 

குறைந்தது அதற்காக எதிர்ப்பையாவது உரிய நேரத்தில் வெளிக்காட்ட முடியவில்லை. இவ்வாறான முள்ளந்தண்டில்லாதவர்கள் தற்போது தேர்தல் காலங்களில் மட்டும் ஊருக்கு எம்.பி. வேண்டும் என்ற தொனியில் வாக்குகளைச் சூரையாட முனைவதை மக்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

சமூகத்திற்காக குரல் கொடுக்க பாராளுமன்றுக்கு அனுப்பப்பட்ட எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் சாதிக்க முடியாதவர்கள் மீண்டும் அதே எம்.பியை ஊருக்கு கொடுத்து எதை சாதிக்க நினைக்கின்றார்கள் என்று கேட்க விரும்புகின்றேன்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அம்பாரை மாவட்டத்தில் வந்து போட்டியிட்டபொழுதுஇ விருப்பு வாக்கில் அடுத்தபடியாக உள்ளவரை நான் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் அனுப்புவேன் என்று வாக்குறுதியளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் குப்பைத் தொட்டிக்குள் வீசி எறியப்பட்டது. 

அந்த சந்தர்ப்பம் சம்மாந்துறையைச் சேர்ந்த நௌஸாட் அவர்களுக்குக் கிடைத்தும் அது அவருக்கு வழங்கப்படவில்லை. ஊருக்கு எம்.பி. இல்லை என்று ஒப்பாரி வைக்கின்றவர்களும் சம்மாந்துறைக்கு எம்.பி. கிடைப்பதற்கு இடையூறாக இருந்தார்கள் என்பது கசப்பான உண்மை. மு.கா தலைவர் அளித்த வாக்குறுதியின்படி சம்மாந்துறைக்கு எம்.பி.யை பெற்றுக்கொடுத்திருந்தால் இம்முறையும் சம்மாந்துறைக்கே எம்.பி. கிடைக்க அதிக வாய்ப்புக்கள் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

நிந்தவூருக்கு இரண்டு தடவைகள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இருந்தும், இரண்டு தடவையும் தேசியப்பட்டியல் எம்.பி.யை நிந்தவூரைச் சேர்ந்த ஹஸன் அலிக்கு எம்.பி. க்கு கொடுத்து அழகு பார்த்த மு.கா. தலைவருக்கு சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, பொத்துவில் ஊர்களுக்கு எம். பி. இல்லை என்பது தெரியாமல் இருந்தது அப்போது மிகவும் துரதிஸ்டவசம். தற்பொழுது சம்மாந்துறை, அட்டாளைச்சேனை,பொத்துவில் மக்களை பார்த்து மு.கா தலைவர் பாசாங்கு காட்டுவது தமது பாராளுமன்றக் கதிரைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக மட்டுமே என்பதை தவிர வேறு எதற்குமல்ல. ஆகவேஇ முஸ்லிம் மக்கள் எதிர்வருகின்ற தேர்தல்களில் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு வருகின்றவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :