விமான பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம் ஒன்று இன்று காலை ரத்மலானை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
செஸ்னா 152 ரக விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
தனியார் பயிற்சி கற்கை நிலையத்துக்கு சொந்தமான விமானமே தரையிரக்கப்பட்டதாக விமானப் படை பேச்சாளர் விங் கமாண்டர் கிஹான் செவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்ற நிலையில், பயிற்சி பெறும் விமானியால் விமானம் செலுத்தப்பட்டமையால், குறித்த விமானம் ரத்மலானையில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது விமான ஓடுபாதையை விட்டு விமானம் சென்றுள்ளது.
விமானத்தில் இருந்த விமானி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விமானத்தில் இருந்து கழன்ற சக்கரம் தெற்கு அதிவேக வீதியில் வீழ்ந்துள்ளது.
மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலனிகமவிலிருந்து காலி நோக்கி செல்லும் வீதியில் உள்ள 18 தசம் 9 ஆம் மைல்கல்லுக்கு அருகிலேயே இந்த விமான சக்கரம் வீழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த விமான சக்கரம் கெலனிகம பொலிஸ் சோதனைசாவடிக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிக்கையொன்றை கோரியுள்ளது.
தற்போது இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக உத்தியோகத்தர்கள் அங்கு சென்றுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சீ.நிமல்சிறி குறிப்பிட்டுள்ளார்.
n1st
0 comments :
Post a Comment