தர்கா நகர், வெலிபிட்டி பள்ளிவாசலில் அமைந்திருக்கும் பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.பள்ளிவாயலில் தக்பீர் ஒலி முழங்க்குவதாக அங்கிருக்கும் சகோதரர் சற்றுமுன் எம்மிடம் தெரிவித்தார்.அப்பிரதேசத்திற்கு பெரும்பான்மை இனத்தவர்கள் கும்பல் ஒன்று வந்துள்ளதாக தமக்கு அறியமுடிவதாக அங்கிருக்கும் சகோதரர் சற்றுமுன் எம்மிடம் தெரிவித்தார். அந்த இடங்களுக்கு அவசர விஜம் மேற்கொண்ட நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்
முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து கடும் சீற்றமும் அதிருப்தியும் அடைந்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அது குறித்து, தற்போது பொலீவியா நாட்டில் ‘ஜி.77′ நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அவசரமாகத் தொடர்புகொண்டு பேசினார் என நம்பகரமாக அறிய வந்தது.
தமது கடும் விசனத்தை வெளியிட்ட ரவூப் ஹக்கீம், இனிமேலும் அரசில் தொடர்ந்து அமைச்சராக நீடிக்க முடியாது என்பதை ஜனாதிபதிக்குக் கோடி காட்டினார் என்றும் கூறப்பட்டது. இது குறித்து திங்கள் அல்லது செவ்வாய் அவர் ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பார் என்றும் அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி வெளிநாடு போயிருக்கும் இச்சமயத்தில் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவும் நாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாமிஆ நளீமியா வளாகம் முழுக்க அம்பேபிட்டி மற்றும் பேருவள பிரதேச மக்கள் நிறைந்துள்ளனர். நளீமியா வளாகத்தில் காயங்களுடன் பலர் வந்து சேர்ந்துள்ளனர்.
இதேவேளை தாக்கப்பட்ட மக்கள் வைத்தியாசாலைக்கு கூட செல்லவதற்க்கு அனுமதியில்லை என இம்போட் மிரர் க்கு அறிவித்தார்கள்.
0 comments :
Post a Comment