த.நவோஜ்-
மட்டக்களப்பு மாமாங்கம் ரெட்ணம் விளையாட்டுக் கழகத்தினால் சசிகலா ஞாபகார்த்த சாவல் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி சீலாமுனை யங்கிஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
மாமாங்கம் ரெட்ணம் விளையாட்டுக் கழக தலைவர் வி.சுவேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், தொழிலதிபர் எஸ்.ஸ்ரீமயன், சீலாமுனை யங்கிஸ்டார் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.நவநேசராஜா, உதைபந்தாட்ட கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சீலாமுனை யங்கிஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏ பிரிவுக்கும், வி பிரிவுக்கும் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஏ பிரிவு ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இங்கு இடம்பெற்ற போட்டியில் முதலாமிடத்தை சீலாமுனை யங்கிஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏ பிரிவும், இரண்டாமிடத்தை சீலாமுனை யங்கிஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் வி பிரிவும், மூன்றாமிடத்தை மட்டக்களப்பு மைக்கேல்மன் விளையாட்டுக் கழகமும், நான்காமிடத்தை டச்பார் இக்னேசியஸ் விளையாட்டுக் கழகமும் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப் பரிசில்களை கலந்து கொண்ட அதிதிகளால் பெற்றுக் கொண்டனர்.
மட்டக்களப்பு மாமாங்கம் ரெட்ணம் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் இவ்வருடத்தோடு மூன்றாவது தடவையாக முதலிடத்தை பெற்றுக் கொண்ட சீலாமுனை யங்கிஸ்டார் விளையாட்டுக் கழகத்தினர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு சம்பியன் கிண்ணத்தை தன்வசப்படுத்திக் கொண்டனர்.
இப்போட்டி நிகழ்வுக்கு வெற்றிக் கிண்ணம், பண உதவிகள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியவர்களுக்கு கழகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கழக செயலாளர் ச.ஜெயலவன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment