ஓட்டமாவடி பாடசாலைகளில் மஹிந்தோய தொழில் நுட்ப பீடத்திற்கான அடிக்கல்-படங்கள் இணைப்பு

த.நவோஜ்-

ட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் இரண்டு பாடசாலைக்கு மஹிந்தோய தொழில் நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
 
இக்கட்டடங்களுக்கு கல்வி அமைச்சினால் தலா இருபத்தைந்து மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மூன்று மாடிகளைக் கொண்டதாக இவை அமையப் பெறவுள்ளன.
 
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வு வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.அஸ்ரப் தலைமையிலும், ஓட்டமாவடி தேசிய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வு கல்லூரி முதல்வர் எம்.எல்.ஜீனைட் தலைமையிலும் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன், அதிதிகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கே.றஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :