உத்தரபிரதேசத்தில் தொடரும் கற்பழிப்புஅகிலேஷ் யாத்வ் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்


எஸ்.எம்.சன்சீர்-   
த்தரபிரதேசத்தில் தொடரும் கற்பழிப்பு சம்பவங்கள் முதல்-மந்திரி அகிலேஷ் யாத்வ் பதவி விலக கோரி அகில இந்திய பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாத்வ் பதவி விலக கோரி அகில இந்திய பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேச மாநிலம் படானில் தலித் சகோதரிகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் படானில் தலித் சகோதரிகள் 2 பேர் கடந்த வாரம் கொடூர கும்பலால் கற்பழித்து தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவ்விவகாரம் நாடும் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கற்பழிப்பு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்தினர். மேலும், அரசியல் கட்சிகளும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. இதனையடுத்து உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்.

தற்போது வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. நாளை 20 பேர்கள் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சம்பவம் நடத்த இடத்திற்கு சென்று விசாரிக்க உள்ளனர். தடவியல் துறை அதிகாரிகள் மற்றும் உ.பி. டி.ஐ.ஜியுடன் அந்த குழு விசாரணை நடத்த செல்கிறது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்தில் இளம்பெண் போலீஸ் கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவமும் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் தொடரும் இதுபோன்ற சம்வங்களால் அகிலேஷ் யாத்வ் பதவி விலகவேண்டும் என்று பெண்கள் அமைப்ப்பினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இது பற்றி தேசிய மகளிர் ஆணைய தலைவர் மம்தா சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது;

பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கமுடியாத முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அந்த மாநில டி.ஜி.பி. உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவருகிறது.பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் பாரதிய ஜனதா கட்சி ,காங்கிரஸ், பகுஜன் உள்ளிட்ட கட்சிகளும், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடதக்கது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :