ஓட்டமாவடியில் இரண்டு பள்ளிவாயல்களில் திருட்டுச் சம்பவம்




த.நவோஜ்-
ஓட்டமாவடியில் இரண்டு பள்ளிவாயல்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருட்டுச் சம்பவம் இடம்பெற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த வகையில் ஓட்டமாவடி அல் மஸ்ஜிதுல் ஸலாம் பஸார் பள்ளிவாயல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு அங்கிருந்த பணமும், பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


அத்துடன் பள்ளிவாயலினுள் உள்ள பள்ளிவாயல் நிர்வாக காரியாலயம் மற்றும் பள்ளிவாயலில் கடமை புரிபவர்களின் அறைகள் என்பன உடைக்கப்பட்டுள்ளன. எனினும் அதனுள் இருந்து எதுவும் எடுக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி அல் மஸ்ஜிதுல் ஸலாம் பஸார் பள்ளிவாயலின் உண்டியல் இம்முறையுடன் நான்காவது முறையாக உடைக்கப்பட்டு அதிலிருந்து பணமும் திருடப்பட்டுள்ளது. இந்த உண்டியல் ஆலய நிர்வாகத்தினால் கடந்த 2014.05.30ம் திகதி பணம் எடுக்கப்பட்டதாகவும் பள்ளிவாயல் நிருவாக சபை செயலாளர் எஸ்.எல்.நளீர் தெரிவித்தார்.


இதேவேளை மேலும் ஓட்டமாவடி முஹைதீன் ஜீம்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்து டிஜிட்டல் கமரா ஒன்றும், சார்ஜர் டோச் லைட் ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வாகன உரிமையாளர் ஜே.எச்.எம்.ரினாஸ் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தூர இடங்களில் இருந்து வியாபாரத்திற்காக வருபவர்கள் ஓட்டமாவடி முஹைதீன் ஜீம்ஆ பள்ளிவாயலில் வாடகைக்கு அறைகள் எடுப்பது வழக்கம், அந்த வகையிலேயே திஹாரியில் இருந்து இரும்புக் கடைகளுக்கான வியாபாரப் பொருட்களை கொண்டு வந்து சனிக்கிழமை இரவு தங்கியவர்களின் லொறியே உடைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இரண்டும் அதிகாலை 3 மணி தொடக்கம் 3.30 மணிக்குள் இடம்பெற்று இருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :