த.நவோஜ்-
கல்குடா அல் கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பேருவல மற்றும் தர்ஹாநகர் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை பேருவல மற்றும் தர்ஹாநகர் பகுதிகளில் இடம்பெற்றது.
கல்குடா அல் கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி. எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) தலைமையில் சென்ற குழுவினராலேயே இவ் இலவச வைத்திய முகாம் நடாத்தப்பட்டது.
இவ்வைத்திய முகாமில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பீ.எம்.பிர்னாஸ் மற்றும் அக்குபஞ்சர் இந்திய வைத்தியர் முகம்மட் றாபி ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
0 comments :
Post a Comment