பெண்ணொருவரைக் கொன்று, அவரது சடலத்தை துண்டு துண்டாக வெட்டி, உடற் பாகங்களை உண்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
தென்னஸி மாநிலத்தைச் சேர்ந்த கிரேகோரி ஹேல், (37 வயது) என்ற நபரே லிஸா கைடர், 36 வயது என்ற பெண்ணை படுகொலை செய்து அவரது உடல் உறுப்புகளை உண்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த படுகொலை குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
6 பிள்ளைகளுக்கு தாயான லிஸா தான் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அண்மையில் அறிந்திருந்தார்.
மதுபோதைக்கு அடிமையான அவர் சம்பவ தினம் மதுபான நிலையமொன்றில் நிறை போதையில் தடுமாறிய நிலையில் தனது முன்னாள் கணவர் சார்ள்ஸ் ஹைதரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு கோரியுள்ளார்.
அதன் பின் அவர் அந்த மதுபான நிலையத்தில் தனக்கு அறிமுகமான ஹேலிகன் உதவியுடன் வீடு செல்வதற்கு முடிவெடுத்தார்.
இந்நிலையில் அவரை தனது காரில் ஏற்றிச் சென்ற ஹேல் அவரை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக கொபி நகரில் பீற் செயின் வீதியிலுள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு லிஸாவை படுகொலை செய்த ஹேல் அவரது சடலத்திலிருந்து தலை கைகள் கால்கள் என்பவற்றைத் துண்டித்து அவரது சடலப்பகுதிகள் சிலவற்றை உண்டார்.
லிஸாவை காணாத அவரது முன்னாள் கணவர் செய்த முறைப்பாட்டையடுத்து ஹேல் கைது செய்யப்பட்டார்.
இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்த ஹேல் அங்கிருந்து மிருகங்களின் எலும்புகளையும் கண் விழிகளையும் எடுத்துச் சென்று தனது வீட்டில் சாத்தானுக்கான மதச் சடங்குகளை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் இறைச்சிக் கடை உடைமையாளரால் பணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
0 comments :
Post a Comment