எம்.ஜே.எம்.சஜீத்-
யுத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் தேவைகளை மஹிந்த சிந்தனை திட்டமானது மக்கள் காலயடியில் சென்று அவர்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றி வருகின்றன. என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.
மஹிந்த சிந்தனையின் கீழ் விசேட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 08 இலட்சம் நிதி மூலம் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட சிவன் கோவில் புணர்நிர்மான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் வைபகம் சிவன் கோவில் ஆலய பரிபாலன சபை தலைவர் எஸ்.மாறன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயராஜன், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், பாராளுமன்ற உறுப்பினரின் இனைப்பு செயலாளர் சிவன்செயல், மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment