மருதானை டெக்னிக்கல் சந்தியும், வெளிநாடுகளில் இருந்து அவ்விடத்தில் வந்து இறங்குபவர்களும்

வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சவுதி, கட்டார், டுபாய் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் நம்மவர்கள் பெரும்பாலும் மருதானை டெக்னிகல் சந்தியில் தரித்து நின்று பஸ்களின் மூலம் ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

அவ்வாறு வருபவர்களிடன் நிறைய பணம் இருக்கும், அவர்கள் கைநிறைய சம்பாதித்துக் கொண்டு வருகின்றார்கள் என்று அங்கிருக்கின்றவர்கள் கணக்குப் போட்டு விடுகின்றனர். அதனால் ஆட்டோகாரவர்கள் அதிகமாக நம்மவர்களிடம் பணம் பறிக்கின்றனர்.

லொஜ்களில் நாம் கொண்டு வரும் பெட்டிகளை வைப்பதற்கு கூட நம்பிக்கை இல்லாது இருக்கும்.

ஒரு இடத்திற்கு ஆட்டோவில் செல்ல 150 ரூபாய் என்றால் வெளிநாடுகளில் இருந்து வரும் நம்மவர்களைக் கண்டால் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்பது, இதனையையே அங்கிருக்கும் ஆட்டோகாரவர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றார்கள்.

நண்பர்களே...!!!! டெக்னிகல் சந்தியில் நீங்கள் நிற்க வேண்டி ஏற்பட்டால்....

01. எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் பெட்டிகளை தனியாக அவ்விடத்தில் விட்டுச் செல்ல வேண்டாம். அது நீங்கள் தங்கி இருக்கும் லொஜ் ரூமாக இருந்தாலும் சரியே.

02. நீங்கள் பஸ்ஸில் செல்லும் நேரம் வரும் வரை யாரிடமும் அதிகம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.

03. உங்களிடம் யாராவது வந்து அதிக நேரம் கதைத்துக் கொண்டிருந்தால் கூட அதனையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

04. உங்களை நன்கு தெரிந்தவர்கள் போலவும், நண்பர்கள் போலவும் உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டும் சில பேர் வருவார்கள் அவர்களிடமும் அவதானமாக இருக்கவும்.

05. அங்கிருக்கும் கடைகளில் அவசர தேவை அன்றி வேறு எந்த தேவைகளுக்கும் பொருட்கள் வாங்காதீர்கள். உங்களைக் கண்டாலே சாதாரண விலையை விட பல மடங்கு பொருட்களின் விலையை உயர்த்துவார்கள்.

ஆகவே...நண்பர்களே...!!! நீங்கள் வெளிநாடுகளில் இருந்து அவ்விடத்தில் வந்திறங்க முற்பட்டால் அந்த இடம் தொடர்பாகவும், அந்த இடத்தில் இருக்கும் ஒரு சில பகல் கொள்ளையர்கள் தொடர்பாகவும் அவதானமாக இருக்கவும்.

மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :