தர்கா அநகர் -அளுத்கம பிரதேசத்தில் வன்முறை:தொடருந்தும் அங்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம்

தர்கா அநகர் -அளுத்கம பிரதேசத்தில் வன்முறையை தொடருந்து அங்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது . ஊடரங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையில் நீடிக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது .

இன்று கடும்போக்கு அமைப்பான பொதுபலசேனா ஏற்பாடு செய்யத பேரணி மற்றும் கூட்டம் இடம்பெற்றுள்ளது அதை தொடர்ந்து முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல், நடாத்தப் பட்டுள்ளது.

கடும்போக்கு அமைப்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தமையால் தர்கா நகர் அலுத்கம பிரதேசத்தில் முஸ்லிம்களின் நடமாட்டத்தை குறைத்துக் கொள்ளுமாறும் முஸ்லிம் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறும் கூட்டம் நடைபெற முன்னர் பொலிஸார் அறிவித்தல் விடுத்திருந்த்தனர். என தகவல்கள் கிடைகிறது . இதன்காரணமாக வீடுகளை விட்டு நகரில் காணப்பட்ட பெரிய பள்ளிவாயல்களில் ஒன்று திரண்டு பாதுகாப்பாக இருந்ததாகவும் அப்பிரதேச செய்திகள் தெரிவித்தன.

அதேவேளை நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டுள்ளனர். எனவும் பொதுபல சேனா அமைப்பினரால் தர்ஹாநகரில் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :