பொலிசார் நிறுத்தக்கூறியும் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிலில் ஓடிய இளைஞன் துப்பாக்கிச் சூட்டில் பலி

மீரிகம, பஸ்யால பிரதேசத்தில் பொலிஸ் சோதனையின்போது மோட்டார் வண்டியை நிறுத்தாது சென்ற இளைஞன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவ் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பஸ்யால பிரதேசத்தில் தனது கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாரால் மோட்டார் வண்டியில் சென்ற இளைஞன் மறிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது வண்டியை நிறுத்தாது சென்ற இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் வதுபிடிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :