உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் கோலாகலமாக ஆரம்பமானது படங்கள்,வீடியோ இணைப்பு

உலகமே எதிர்பார்க்கும் 2014 உலகக் கிண்ண கால்பந்து போட்டி தொடர் பிரேஸிலின் சாவ் போலோவில் கோலாகலமாக ஆரம்பமானது.

கரின்தியன்ஸ் அரீனா மைதானத்தில் தொடக்க விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரளாக வந்து, கால்பந்தை ஆராதிக்க தொடங்கி விட்டனர். இருப்பினும் விழா தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு வரை பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன.
குறித்த விழாவில் மைதானத்தின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட எல்.ஈ.டி பந்து கவனத்தை ஈர்த்தது. அதில் பல்வேறு மொழிகளில் நல்வரவு தெரிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் வித்தியாசமான உடைகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். குறிப்பாக மரங்கள், தாவரங்கள் போல உடை தரித்து நடனமாடியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சில தற்காப்பு கலைஞர்களும் சாகசம் புரிந்தனர்.

பின்னர், பொப் பாடகி ஜெனிஃபர் லோபஸ், கிளாடியா லீட்டி, பிட் புல் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடத்தினர். தொடக்க விழாவை உலகம் முழுவதும் இருந்து 300 கோடி பேர் தொலைக்காட்சிகளில் கண்டு ரசித்தனர்.

கரின்தியன்ஸ் அரீனா மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் இடம்பெற்ற கண்கவர் நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் ரசிகர்களின் உற்சாக தருணங்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :