இத்தாலி வீரரை கடித்து வைத்ததைத் தொடர்ந்து உருகுவே வீரர் சுவாரஸை கிண்டல் செய்வது போன்ற படங்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன.
கடந்த 2010ல், உள்ளூர் தொடரில் ஆம்ஸ்டர்டாம் அணிக்காக விளையாடிய இவர், எந்தோவன் அணியின் பக்கல் தோள்பட்டையில் கடித்தார். இதற்காக இவருக்கு 7 உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பிரிமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணியில் விளையாடிய போது, செல்சி அணியில் இடம் பெற்றிருந்த இத்தாலி வீரர் இவானோவிச், வலது கையில் கடித்தார். இதற்காக 10 போட்டிகளில் தடை கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இந்த உலகக்கிண்ணத்தில் ஜியார்ஜியோ செலினியை கடித்துள்ளார். இந்த சம்பவத்துக்குப் பின் சமூக வலைத்தளங்களில் இவர் குறித்த நிறைய கொமெடி செய்திகள், சித்தரிக்கப்பட்ட படங்கள் வெளியாகின.
0 comments :
Post a Comment