கொழும்பின் புறநகர் பகுதியான அளுத்கமையில் பொலிஸார் வித்தியாசமான சட்டத்தை அமுல்படுத்துவதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது.
தானசாலையில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அளுத்கமையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளில் பலர் பள்ளிவாசல்களின் பக்கமே செயற்படுகின்றனர். எனவே தாக்குதலுக்கு உள்ளான பௌத்த பிக்குவை அமைதியாக இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதாக பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்மூலம் பாரிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதற்கு முஸ்லிம்கள் தயாராக இருந்தாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் பள்ளிவாசல்களுக்கு ஆதரவாக செயற்படும் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில் பௌத்த பிக்கு ஒருவரின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர் தாம் பிக்குவை தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். எனினும் கடுமையான வார்த்தை பிரயோகங்களை தாம் பிக்குவிடம் வெளியிட்டதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்தே பௌத்த பிக்கு பொய்யான முறைப்பாட்டை பொலிஸில் மேற்கொண்டுள்ளதாக குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார். இது சில ஊடகங்களில் வெளியான தகவல்
0 comments :
Post a Comment