இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை நியமிக்கும் விசாரணைக் குழு இலங்கைக்கு வருகைதந்து விசாரணை மேற்கொள்ளக் கூடாதென பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வரினால் சமர்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான அச்சல ஜாகொட, மாலினி பொன்சேக்கா, ஜானக்க பிரியந்த பண்டார, உதித்த லொக்குபண்டார, ஏ.எச்.எம் அஸ்வர், சாந்த பண்டார, ஜே.ஆர்.பீ சூரியப்பெரும, நிமல் விஜேசிங்க மற்றும் துமிந்த சில்வா ஆகியோர் இந்த பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment