சுகாதார உத்தியோகத்தர் கடித்ததால், தாதி ஒருவர் காயமடைந்த சம்பவம்; விசாரணைகள் ஆரம்பம்


ராகமை வைத்தியசாலையில் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் கடித்ததால், தாதி ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து, ராகமை வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
வைத்தியாசாலையின் 17 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த தாதியர் மீது குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களும், சிற்றூழியர்களும் தாக்குதல் நடத்தியதாக தாதியர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

அவர்கள் நோயாளர் விடுதிக்கும் சேதம் விளைவித்ததாக நோயாளர் விடுதிக்குப் பொறுப்பான தாதி உத்தியோகத்தர் தெரிவிக்கின்றார்.
எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டினை அரச குடும்பநல சுகாதார உத்தியோகத்தர் சங்கம் மறுத்துள்ளது.

மகப்பேற்று பிரிவிற்குள் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது ஊழியர்களுக்கு உணவு எடுத்துச்சென்ற வைத்தியசாலையின் கனிஷ்ட பெண் ஊழியரை தாதியர்கள் இன்று காலை தாக்கியதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ராகமை போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவிற்குள் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் சிலரை தாதியர்கள் சிறைப்பிடித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் யு.எம்.எம். சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினையில் தற்போது கனிஷ்ட ஊழியர்களும் தொடர்புபட்டுள்ளதால் சிக்கலான சூழல் உருவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :