தனது முன்னாள் காதலியின் புதிய காதலரின் இருதயத்தை கத்தியையும் முள்ளுக்கரண்டியையும் பயன்படுத்தி உண்ட நபரொருவரை தென் ஆபிரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிம்பாப்வே பிரஜையான குறிப்பிட்ட நபர் தனது முன்னாள் காதலியின் புதிய காதலரின் (62 வயது) மார்பிலும் கழுத்திலும் கத்தியால் குத்தி அவரைப் படுகொலை செய்துள்ளார். அத்துடன் அவரது முகத்தையும் தனது பற்களால் கடித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் கேப் நகருக்கு அண்மையிலுள்ள குகுவெது எனும் இடத்தில் வைத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேற்கு கேப் நகர பிரதி பொலிஸ் ஆணையாளர் ஷரொன் ஜெப்டா விபரிக்கையில் இது முக்கோண காதலின் விளைவாக இடம்பெற்ற மிகவும் கொடூரமான படுகொலை என்று கூறினார்.
0 comments :
Post a Comment