கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உடைய 'மஜீதின் கனவு' வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கிலான அபிவிருத்திக் குழுக் கூட்டமொன்று நேற்று (10.06.2014) மாலை 6.30 மணிக்கு கிண்ணியா மகரூப் நகர் பிரதேசத்தில் நடைபெற்றது.
அன்னல் நகர், மதினா நகர், மகரூப் நகர், பைசல் நகர் ஆகிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான எம். அஸ்வத்கான், ஏ.எஸ்.எம் பரீஸ், கிண்ணியா கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், மேற்படி பிரதேசங்களின் கிராமிய அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், மீனவர்கள், வியாபாரிகள், விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய முதலமைச்சர் நஜீப் ஏ மஜித் 'கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற இப்பெரிய பதவியை உங்களுக்காகவே இறைவன் எனக்குத்தந்துள்ளான். என்னால் முடிந்த பல வேலைத்திட்டங்களை உங்களுக்காக செய்து கொண்டே இருக்கின்றேன். இன்னும் பல செய்யவுள்ளேன். எனக்கு பல சவால்களும், எனது சேவைக்கு குறுக்கிடும் பல தடைகளும் வந்து கொண்டே இருக்கின்றது. இந்த சவால்கள் எனக்கு இன்று மட்டுமல்ல. இதற்கு நான் பயப்படப் போவதுமில்லை. பயம் என்பது என் இரத்தத்திலும் இல்லை.
மு.மெ.ரசாட் முகம்மட்
முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர்
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய முதலமைச்சர் நஜீப் ஏ மஜித் 'கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற இப்பெரிய பதவியை உங்களுக்காகவே இறைவன் எனக்குத்தந்துள்ளான். என்னால் முடிந்த பல வேலைத்திட்டங்களை உங்களுக்காக செய்து கொண்டே இருக்கின்றேன். இன்னும் பல செய்யவுள்ளேன். எனக்கு பல சவால்களும், எனது சேவைக்கு குறுக்கிடும் பல தடைகளும் வந்து கொண்டே இருக்கின்றது. இந்த சவால்கள் எனக்கு இன்று மட்டுமல்ல. இதற்கு நான் பயப்படப் போவதுமில்லை. பயம் என்பது என் இரத்தத்திலும் இல்லை.
இவ்வாறே நீங்களும் அச்சமின்றி எமது தாய் நாட்டுக்காக உழைக்க வேண்டும். சில உள்ளுர், சர்வதேச சக்திகள் எமது தேசிய அபிவிருத்தியைக் கண்டு சகிக்காமல் வீண் பழிகளை கூறி வருகின்றனர். இவர்களுக்கு நாம் அஞ்சக்கூடாது. அதிகாரிகள் மக்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் மக்களுடைய குறைகளை தீர்ப்பதற்கு அவர்களுக்கு பொறுப்புள்ளது அதிகாரிகள் தங்களுடைய கடமைகளை சரிவர செய்யாத சந்தர்பங்களில் அவர்களுக்கு எதிராக முறையிடுவதற்கு மக்களாகிய உங்களுக்கு உரிமை உள்ளது என இதன் போது மேலும் கூறினார்.
இம்மக்கள் சந்திப்பின் போது மக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனே தொலைபேசி மூலம் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வினைப் பெற்றுக் கொடுத்ததுடன் வீதி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்திக்காக மக்களால் முன்மொழியப்பட்ட பிரேரனைகளுக்கான திட்டங்களை மிக விரைவில் அமுல்படுத்துவதற்கான அங்கீகாரத்தினை இதன் போது முதலமைச்சர் வழங்கினார்.
விசேடமாக இப்பிரதேசத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்திய முதலமைச்சர், தற்போது மீன்பிடித் தொழிலில் ஏற்பட்டிருக்கி;ன்ற பிரச்சினைகளுக்கு மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்தினவை சந்தித்து அதற்குறிய உடனடித் தீர்வினைப் பெற்றுத் ;தருவதற்கான வாக்குறுதியை இதன் போது வழங்கினார். இது போன்ற மக்கள் சந்திப்புக்கள் தொடர்ச்சியாக எல்லா இடங்களிலும் 'மஜிதின் கனவு' வேலைத்திட்டத்தின் கீழ் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சரின் பிரத்தியேக திட்டப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மு.மெ.ரசாட் முகம்மட்
முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர்
0 comments :
Post a Comment