இலங்கையில் சிறுபான்மை மக்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் - முஸ்லிம் காங்கிரஸ்

லங்கையில் சிறுபான்மை மக்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் 11 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச கடப்பாட்டினை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானமும் அதில் அடங்குகின்றது.

மாகாண சபைகளுக்கு பூரண அதிகாரங்களை வழங்குதல், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவது ஆகிய தீர்மானங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவெற்றியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :