மாணவர்களின் கற்கும் முறைகளை மேம்படுத்துவதற்கான திறன்களை விருத்தி செய்யும் பயிற்சி வகுப்பு கனதற, கட்டுக்கெளியாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதன் அதிபர் ஏ.எம் நவ்பர் தலைமையில்.இடம் பெற்றது. இப்பயிற்சி வகுப்பில் மாணவர்களின் ஆற்றல்,
இயளுமை,திறன்களை கண்டறிந்து கற்கும் திறனை மேம்படுத்துவதாக அமைந்தது. இப்பயிற்சி வகுப்பின் வளவாளராக உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியினை பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் கட்டுக்கலியாவ சமூக அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சி வகுப்பில் க.பொ.த (உ.த) ,க.பொ.த (சா), மற்றும் 10ஆம் தர மாணவர்களும் பங்குபற்றினர்.
0 comments :
Post a Comment