ஆட்கடத்தல் காரர்களை நம்பி ஏமாறாதீர்கள்:அவுஸ்திரேலிய அரசு

ட்கடத்தல் காரர்களை நம்பி பணத்தையும் உயிரையும் பறிகொடுக்கவேண்டாம் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற  முறையில் படகுகளில் பயணங்களை மேற்கொண்டு வருகைதருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
சட்ட விரோதமான முறையில் படகுகளில் பயணம் மேற்கொண்டு அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் அகதி அந்தஸ்து கோருபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டின் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்றுக்காலை யாழ்ப்பாணம் பொது நூலககேட்போர்கூட்டத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வின் போதே அவுஸ்ரேலிய நாட்டுப்பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இந்தச் செயலமர்வில் அந்நாட்டு பிரதிநிதியான ஆர்.மஹ்வோல்டன் தெரிவிக்கையில்,
சட்டவிரோதமான முறையில் படகுகளில் ஆட்களைக்கடத்துவதை தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அவுஸ்ரேலிய அரசாங்கம் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. படக்குகள் மூலம் ஆட்களைக்கடத்தும் கும்பல்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி படகுகளில் ஆட்களைக்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. இத்தகைய ஆட்கடத்தல் கும்பல்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி யாரும் படகுகளில் பயணம் மேற்கொள்ளவேண்டாம். சட்ட விரோதமான முறையில் படகுகளில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கு பல விசாரணைகள் இடம்பெறும் அதேவேளை அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் புதிய கொள்கைகளுக்கு அமைவாக அகதி அந்தஸ்சு யாருக்கும் வழங்கப்படமாட்டாது.
அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு இலங்கை ஒருமூல நாடுகளின் வரிசையிலுள்ளது.அதேவேளை இடைத்தங்கல் நாடாகயிருக்கின்றது. இந்தோனேசியா, பப்புவாநியுக்கினி போன்ற நாடுகளும் இடைத்தங்கல் நாடாகவேயுள்ளது. இலங்கையிலிருந்து படகுகள் மூலம் சட்டவிரோதமாக பயணம் மேற்கொள்பவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேற முடியாது பப்புவாநியுக்கினி மற்றும் நாவுறு போன்ற இடைத்தங்கல் நாடுகளிலேயே தங்க வைக்கப்படுவார்கள்.
ஆனால் மக்களை படகுகளில் கடத்துவர்கள் பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவழங்கி அவுஸ்திரேலியாவில் குடியேற முடியும் என்று கூறி பணமோசடியில் ஈடுபடுகின்றனர். 
இத்தகைய மோசடிக்கும்பல்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமார்ந்து பாதுகாப்பற்ற முறையில் யாரும் படகுகளில் பயணம் மேற்கொள்ளவேண்டாம்.
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து யாருக்கும் வழங்கப்படுவதில்லை. இதனை புரிந்துகொள்ளாமல் உயிரைப்பணயம் வைத்து பலர் படகுகள் மூலம் நீண்டதூரம் பணயம் மேற்கொள்கின்றனர்.
மேலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்டு படகுகள் மூலம் அவுஸ்ரேலியாவிற்கு வருபவர்கள் அங்கிருந்து அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பட்டு வருகின்றனர் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
அதிகளவு பணத்தைச் செலவு செய்து பசி, பட்டினியுடன் கடல்மார்க்கமாக பயணம் மேற்கொள்பவர்களின் எதிர்பார்ப்புக்கள் ஒரு போதும் நிறைவேறப்போவதில்லை.
ஆட்கடத்தல் காரர்கள் சட்டபூர்வமற்ற  முறையில் செயற்படுகின்றனர்.இவர்களின் தவறான செயற்பாடுகளுக்கு துணைபோகும் வகையில் செயற்படுபவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அகதி அந்தஸ்சினை அவுஸ்ரேலிய அரசாங்கம் வழங்கும் என்று நினைப்பது முற்றிலும் தவறானது.  அவுஸ்ரேலிய அரசாங்கம் தனதுஇறையாண்மைக்கு கட்டுப்பட்டே செயற்படும்.சட்ட ரீதியான நடவடிக்கைக்கும் சர்வதேச சமவாயத்திற்கும் கட்டுப்பட்டே அவுஸ்ரேலிய அரசாங்கம் செயற்படும்.
சட்டவிரோதமான முறையில் படகுகளில் ஆட்கள் கடத்தப்படுவது முற்றுமுழுதாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். தேவையற்ற உயிரிழப்புகளையும் வீண்விரையமாகும் பணத்தையும் கட்டுப்படுத்தவேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே அவுஸ்ரேலிய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :