இஸ்லாம் மதம் பற்றி வகுப்பு நடத்த அழைப்பு விடுக்கும் பொதுபலசேனா

எமது பொறு­மைக்கும் ஓர் எல்லை உண்டு. முஸ்லிம் தலை­வர்கள் எம்மை சீண்­டிப்­பார்க்க வேண்டாம் என எச்­ச­ரிக்கும் பொது­ப­ல­சேனா பௌத்த அமைப்பு முஸ்­லிம்­க­ளுக்கும் இறுதி ஆத­ரவு நாம் என்­பதை மறந்து விட வேண்டாம் எனவும் தெரி­வித்­தது.இஸ்­லா­மிய மார்க்கம் என்­ன­வென்­பதை முஸ்லிம் இன­வாத தலை­வர்­க­ளுக்கு நாம் கற்று தரு­கின்றோம். எமது வகுப்­பு­க­ளுக்கு வாருங்கள் எனவும் அவ்­வ­மைப்பு குறிப்­பிட்­டது.
 

 
பொது­ப­ல­சேனா பௌத்த அமைப்­பினால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது முஸ்­லிம்கள் விட­யத்தில் பொது­ப­ல­சேனா அமைப்பு கடு­மை­யாக செயற்­ப­டு­வது ஏன் என்ற கேள்வி எழுப்­பிய போதே அவ்­வ­மைப்பின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;
 
நாம் ஒரு­போதும் முஸ்­லிம்கள் விட­யத்தில் கடு­மை­யாக செயற்­ப­ட­வில்லை. நாம் ஓர் இறுதிக் கொள்­கையை மக்கள் மனதில் திணிக்­க­வில்லை. முஸ்லிம் மதத்­தையோ ஏனைய மதக் கட­வுள்­க­ளையோ கொச்­சைப்­ப­டுத்­த­வில்லை. மத­மாற்று நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வு­மில்லை. எனினும் முஸ்லிம் அமைப்­புக்கள் சில இதனை செய்து கொண்­டி­ருக்­கின்­றன.
 
பௌத்த மதத்தை இழி­வு­ப­டுத்தி பேசு­கின்­றனர். புத்தர் மனித மாமிசம் உண்­ட­தாக இணை­யத்­த­ளங்­களில் கருத்­துக்­களை பரப்­பு­கின்­றனர். இவை எதுவும் தவ­றாக தெரி­ய­வில்­லையா? ஊட­கங்­களும் இவை தொடர்பில் எழுத மறுக்­கின்­றன. எனினும் நாம் நியா­யத்­திற்­காக போரா­டு­வதை ஊட­கங்­களும் ஏனைய மத அமைப்­புக்­களும் பெரி­து­ப­டுத்தி விடு­கின்­ற­மை­யா­னது கண்­டிக்­கத்­தக்­கது.
 
குறிப்­பாக முஸ்லிம் தலை­வர்கள் பொது­ப­ல­சேனா அமைப்பை தாக்கிப் பேசு­வ­தையே வேலை­யாக செய்­கின்­றனர். வாக்­குகள் பெறு­வ­தற்கும் கட்சி கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கும் நாமே அவர்­க­ளுக்கு துரும்­புச்­சீட்­டாக கிடைத்­துள்ளோம். உண்­மை­யி­லேயே முஸ்­லிம்­களை பாது­காக்க வேண்­டு­மென்ற எண்ணம் இவர்­க­ளுக்கு கிடை­யாது. ஆபத்­தான நிலை­யிலும் பௌத்­தர்­களே முஸ்லிம் சமூ­கத்­திற்கு உத­வு­கின்­றனர். முஸ்­லிம்­க­ளுக்கு இறுதி ஆத­ரவு நாம் என்­பதை எவரும் மறந்து விட வேண்டாம். அதேபோல் தொடர்ந்தும் எம்மை சீண்­டிப்­பார்க்கும் வேலை­யினை முஸ்லிம் அமைப்­புக்­களும் ஏனை­ய­வர்­களும் கைவிட வேண்டும். எமது பொறு­மைக்கு ஓர் எல்லை உண்டு என்­பதை மறந்து விட வேண்டாம்.
 
 
மேலும்இ நாட்டில் எல்லாப் பக்­கமும் பிரச்­சி­னைகள் உள்­ளன. தமிழ் பிரி­வினை வாத அமைப்­புக்கள் நாட்டை பிரிக்கும் நோக்கில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. மறு­புறம் முஸ்லிம் அமைப்­புக்கள் ஏனை­யோரை மதம் மாற்­று­வ­திலும் நாட்டில் தீவி­ர­வா­தத்­தினை பரப்­பு­வ­திலும் மும்­மு­ர­மாகச் செயற்­ப­டு­கின்­றன. சர்­வ­தேசம் இலங்­கையை பழி­வாங்கும் நோக்கில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.
 
இவ்­வா­றான நிலையில் அர­சாங்கம் எதையும் கண்­டு­கொள்­ளாது வாய்­மூடி செயற்­பட்டால் யார் நாட்டை காப்­பாற்­று­வது? இதனை நாம் செய்து வந்தால் இன­வா­திகள் என்ற பெயரை சூட்டி எம்மை இழி­வு­ப­டுத்­து­கின்­றனர். நாட்டில் மத விட­யங்­களில் யாரும் தலை­யி­டக்­கூ­டாது. என்­பதை நாமும் தொடர்ந்து வலி­யு­றுத்­து­கின்றோம். எனினும் முஸ்லிம் தலை­மைகள் மதத்தை மாத்­திரம் கையில் எடுத்­துக்­கொண்டு ஏனை­யோரை இழி­வு­ப­டுத்­து­வதை நாம் உண்­மை­யாக கண்­டிக்­கின்றோம். இஸ்­லா­மிய மதம் என்ன சொல்­கின்­றது என்­பது எமக்கு தெரியும். எனினும் இஸ்­லா­மிய அமைப்­புக்­களும் அர­சியல் தலை­வர்­களும் இதனை தெரிந்து கொள்­ளாது நாட்­டிற்கு பொருந்­தாத விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றனர்.
 
இவர்­க­ளுக்கு மார்க்­கத்தின் விட­யங்கள் தெரி­ய­வில்லை. எனவே எம்­மிடம் வாருங்கள் நாம் பாடம் சொல்லித் தரு­கின்றோம். அதேபோல் முஸ்லிம் சமூகத்திற்கு பயந்து அரசாங்கம் செயற்படலாம். ஆனால் நாம் ஒருபோதும் பௌத்த கொள்கைகளை விட்டுக்கொடுத்து செயற்படத் தயாரில்லை. இன்று இஸ்லாமிய கொள்கைவாதம் கிழக்கில் மட்டுமன்றி மாவனல்லை, கண்டி,கம்பஹா ஆகிய பகுதிகளிலும் மிக வேகமாக பரவி வருகின்றது. இதனை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :