எம்.ஜே.எம்.சஜீத்-
பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நற்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அட்டாளைச்சேனை 06 ம் பிரிவின் சிவில் பாதுகாப்பு குழு செயலாளர் கிராம சேவகர் யூ. எல் . எம் .அப்துல்லா தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே. எம் .ஏ. கே . பண்டார கலந்துகொண்டார் அவர் உரையாற்றுகையில் எமது பிரதேசத்தில் ஏற்படுகின்ற சிறு சிறு பிரச்சினைகளை நேரடியாக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வராமல் உங்களுடைய சிவில் பாதுகாப்பு குழு மூலம் அவ்வாறான பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள். இல்லாவிடில் பொலிஸ் நிலையத்துகு அனுப்பி வையுங்கள் என்றார்.
அது மாத்திரம் இல்லாமல் பிரச்சினைகளை ஏற்படுத்துவர்களை எங்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்யுங்கள். பொதுவாக சில அசம்பாவிதமான செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபட்டுயிருப்பின் அவர்களை தகுந்த ஆதரத்துடன் நிருபியுங்கள் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கபடும் என்றார்.
இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்பு குழுவின் அமைப்பாளர் சாஜன் அப்துல்லா, 06 ம் பிரிவு சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி சாஜன் முகம்மட் மற்றும் பள்ளி தலைவரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment