தாம் மோட்டார் வண்டியை நிறுத்தியதன் பின்னரே பொலிஸார் தனது நண்பனைச் சுட்டார்கள்-நண்பன்

தாம் மோட்டார் வண்டியை நிறுத்தியதன் பின்னரே பொலிஸார் தனது நண்பன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞனின் நண்பன் தெரிவித்துள்ளார்.

எனினும் தாம் தப்பிச் செல்ல முயன்றவேளை பொலிஸார் தனது நண்பனை சுட்டுக் கொன்றதாக யாரேனும் கேட்டால் சொல்ல வேண்டும் என பொலிஸார் எச்சரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு மோட்டார் வண்டியில் சென்ற இளைஞன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய நபர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த மோட்டார் வண்டியில் சென்ற இளைஞனின் நண்பன் ஊடகங்களுக்கு தகவல் வழங்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த சம்பவம் இடம்பெற்றவேளை பொலிஸார் ஐவர் மதுபோதையில் இருந்ததாக அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

மோட்டார் வண்டியில் சென்ற இளைஞன் மோட்டார் வண்டியை நிறுத்தாது தப்பிச் சென்றவேளை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்க பொலிஸார் முயற்சிப்பதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்தார்.

தனது மகன் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்ற, முறைப்பாடு செய்ய தேவையில்லை என பொலிஸார் தெரிவித்ததாக உயிரிழந்த இளைஞனின் தந்தை குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தின்போது மோட்டார் வண்டியில் சென்ற பிறிதொரு இளைஞன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ad
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :