தெற்கு அதிவேக வீதியில் விமானம் ஒன்றின் உலோக வலயம் கண்டுபிடிப்பு


தெற்கு அதிவேக வீதியில் விமானம் ஒன்றின் சக்கரம் விழுந்த இடத்திற்கு சற்று தொலைவில் இருந்து மற்றுமொரு உலோக வலயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்த உலோக வலையம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானத்திலிருந்து கழன்று விழுந்த பாகங்களை கண்டுபிடிப்பதற்காக குறித்த பகுதியில் இன்று 15 விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை, பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்பட்ட விமானமொன்று இரத்மலானை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை ஆரம்பித்த முதற்கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது

சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பிரதம விசாரணை அதிகாரி இந்த விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

குறித்த விமானத்திலிருந்த பயிலுநர் விமானியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த இடத்தின் புகைப்படங்கள் மற்றும் தரவுகளும் பெறப்பட்டுள்ளன.

செஸ்னா 152 ரக விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் சக்கரமொன்று நெற்று முற்பகல் கழன்று தெற்கு அதிவேகவீதியின் மில்லனிய பகுதியில் விழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :