ஆலங்குளம் அருகே பெண் கழுத்தை நெரித்து கொலை


நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள அருணாசலம்பட்டியை சேர்ந்தவர் உதயராஜ் என்ற ராமசாமி. கூலி தொழிலாளி. இவருக்கும் ஆலங்குளம் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த சக்தி செல்வி என்பவருக்கும் இடையே கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு கலைசெல்வி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. ராமசாமி கேரளாவுக்கு வேலைக்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது மனைவியை அவரது தாய்வீடான அழகாபுரியில் கொண்டு வந்து விட்டு செல்வாராம்.

பின்னர் கேரளாவில் இருந்து இரவு ஊருக்கு வரும்போது அழகாபுரி வந்து மனைவியை பார்த்துவிட்டு மறுநாள் காலை ஊருக்கு செல்வார். நேற்று நள்ளிரவு ராமசாமி கேரளாவில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். இரவு மனைவியுடன் பேசிக்கொண்டு படுத்திருந்த ராமசாமி நள்ளிரவு 2 மணிக்கு திடீர் என்று அவசர அவசரமாக சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.

இதை பார்த்த சக்திசெல்வியின் தாய் சந்தேகம் அடைந்து வீட்டினுள் சென்று பார்த்தார். அங்கு சக்திசெல்வி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அன்னலட்சுமி மகள் உடலை பார்த்து கதறி அழுதார். இதுபற்றி ஆலங்குளம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரனை நடத்தினர். கொலை செய்யப்பட்ட சக்திசெல்விக்கும், அவரது கணவர் ராமசாமிக்கும் இடையே திருமணம் ஆனதில் இருந்தே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் சக்திசெல்வி தனது தாய் வீட்டுக்கு அடிக்கடி வந்துவிடுவாராம்.

இதுபற்றி ஊர் பெரியவர்கள் பேசி சக்திசெல்வியை அவரது கணவருடன் சேர்த்து வைத்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் கருத்துவேறுபாடு மறந்து சேர்ந்து வாழ்ந்தனர். எனினும் அவ்வப்போது ராமசாமி தனது மனைவியிடம் வீட்டில் கூடுதல் நகை வாங்கி வருமாறு கேட்டு வந்தார்.

இதனால் அவ்வப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்ற ராமசாமி நள்ளிரவு மனைவியை கொலை செய்யும் நோக்கத்தோடு வீட்டுக்கு வந்துள்ளார்.

இரவு சக்திசெல்வி தூங்கும் சமயத்தில் ராமசாமி சக்திசெல்வியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. திருமணத்தின்போது சக்திசெல்வியின் வீட்டில் ராமசாமிக்கு செயின் போடுவதாக கூறியுள்ளனர். ஆனால் சொன்னபடி செயின் போட முடியவிலை என தெரிகிறது. இதை காரணம் காட்டி ராமசாமியும், அவரது தாயும் அடிக்கடி சக்திசெல்வியிடம் தகராறு செய்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திசெல்வியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராமசாமி அவரை அடித்துள்ளார். இதனால் நடத்தை சந்தேகத்தில் இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவான ராமசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆலங்குளம், அழகாபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :