பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள இந்து ஆலயமொன்றை தாக்கிய இனந்தெரியாத ஆயுததாரிகள், அங்கிருந்த அனுமார் சிலையொன்றை உடைத்து சேதப்படுத்திய பின் அந்த ஆலயத்திற்கு தீ வைத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
லதிபாபாத் பிரதேசத்திலுள்ள மேற்படி ஆலயத்திற்கு காரொன்றில் வந்த ஆயுததாரிகள், தாம் பிரார்த்தனையில் ஈடுபடப் போவதாக தெரிவித்து அனுமார் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் பிரவேசித்ததாக அந்த ஆலயத்தின் பொறுப்பாளரான தர்ஷன் குமார் தெரிவித்தார்.
இதனையடுத்து அனுமார் சிலையை உடைத்த ஆயுததாரிகள் மண்ணெண்ணையை விசிறி ஆலய கட்டடத்துக்கு தீ வைத்ததாக குறிப்பிட்ட தர்ஷன் குமார், அவர்கள் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி தன்னை கோயிலை விட்டு வெளியேற்றியதாக கூறினார்.
ஆயுததாரிகள் தப்பிச் சென்றதும் சம்பவ இடத்துக்கு வந்த பிரதேசவாசிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் ஆலயத்தின் ஒரு பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment