சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை இல்லாதொழிப்போம்



த.நவோஜ்-

ஜூன் 12ம் திகதி சர்வதேச சிறுவர் உழைப்பு, ஒழிப்பு தினத்தையொட்டி ஜூன் 09ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரை சிறுவர் உழைப்பிற்கு எதிரான தேசிய செயற்பாட்டு வாரமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பிரகடனப்படுத்தியுள்ளது.
 
வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.ராகுலநாயகியின் வழிகாட்டலில் வாகரை பிரதேச செயலகப் பிரிவில் 'சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை இல்லாதொழிப்போம்' என்ற தொனிப் பொருளில் காயங்கேணி - இறாலோடைக் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
 
இந்நிகழ்வு பிரதேச சிறுவர் பாதுகாப்பபு உத்தியோகத்தர் கே.ரவிச்சந்திரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வீ.யோகராஜா, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.ஹாபீலா, முன்பள்ளிப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.தவநீதன், வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் கே.சுதேஸ், உளவல துணையாளர் வீ.பிரபாகரன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இதன் போது வாகரை ஆட்ஸ் கழகத்தினால் விழிப்புனர்வு நாடகமும் நடாத்தப்பட்டது.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :