பொது பல சேனா அமைப்பின் பொது செயளாலர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்காவுக்கான ஐந்து வருட மல்டிபல் வீசாவை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள் காட்டி இலங்கையின் முன்னனி சிங்கள வானொலி ஒன்று சற்றுமுன் அறிவித்தது.
இவ்வீசா ரத்தினை தொடர்ந்து பொது பல சேனா அமைப்பின் பொது செயளாலர் கலபொட அத்தே ஞானசார தேரர் அமெரிக்கவுக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளாத அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த செய்தியை பொது பல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment