பொதுபல சேனாவின் செயற்பாடுகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

பொதுபல சேனாவினால் இன்று (15) மதியம் 1.00 மணிக்கு அளுத்கமையில் நடாத்தவுள்ள கூட்டம் தொடர்பில் முஸ்லிம் சமூக அமைப்புக்கள் இணைந்து கையொப்பமிட்ட கடிதமொன்றை பொலிஸ் மா அதிபருக்கு

இன்று கையளித்துள்ளனர். இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், வை.எம்.எம்.ஏ., இலங்கை வக்பு சபை மற்றும் கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியன ஒப்பமிட்டுள்ளன.

அளுத்கமையில் கடந்த 12 ஆம் திகதி சம்பவத்துக்குப் பின்னர் மோசமான ஒரு கள நிலவரத்தில் இது போன்ற ஒரு கூட்டம் நடைபெறுவது ஆரோக்கியமானதல்ல என்பதை இவ்வமைப்புக்கள் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளன. இக்கூட்டத்தின் போது முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பளிக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :