ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
கொழும்பு-10, அல்ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கென சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவுகளுக்கான இரண்டு கணனிக் கூடங்களின் திறப்பு விழா பாடசாலை அதிபர் திருமதி ரி.பி.எம்.ஸாஹிர் தலைமையில் வெள்ளிக்கிழமை(27) நடைபெற்றது.
பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக சேவையாளர் என்.எம்.உவைஸ் கலந்து கொண்டு கணனிக்கூடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க தலைவர் பெரோஸ் நூன், செயலாளர் எம்.லத்தீப் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இக்கணனிக் கூடங்களுக்கான கணனிகள் மற்றும் தளபாடங்களை சமூக சேவையாளர் என்.எம். உவைஸ் நன்கொடையாக வழங்கியிருந்தார்.
0 comments :
Post a Comment