ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று-
அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பினால் (அவா) ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே சமாதானம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்கிலான அனுபவப் பகிர்வு ஒன்று கூடலொன்று அக்கரைப்பற்று அல்-ஹிதாயா வித்தியாலயத்தில் பெண்கள் அமைப்பின் தலைவி எஸ்.எம்.பாத்திமா பாஹிரா தலைமையில நேற்று (28.06.2014) சனிக்கிழமை முற்பகல் நடைபெற்றது.
அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பின் (அவா) அனுசரனையுடன் நடைபெற்ற இந் நிகழ்வில்; புpரதம அதிதியாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.கே.பண்டார அவர்கள் கலந்து கொண்டதோடு, அதிதிகளாக அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான பிரதம குரு விஸ்வபிரம்மஸ்ரீ வி.தங்கவேல், பாடசாலை அதிபர் எஸ்.எம்.ஆதம் லெவ்வை, பிரதி அதிபர் எம்.எல்.சலீம், அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள், இன நல்உறவு அமைப்பின் இணைப்பாளர் உட்பட உறுப்பினர்கள் மற்றும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே சமாதானம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்கிலான இவ் அனுபவப் பகிர்வு ஒன்று கூடலின்போது அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பின் (அவா) அனுசரனையில் பாடசாலையில் செயற்படு;தப்பட்ட் முலிகை வளர்ப்பு, பாடசாலை பூந்தோட்டம் வளர்ப்பு, வகுப்பறை அலங்காரப் போட்டிகளில்; வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபாடுகாட்டிய மாணவர்கள் என மாணவர்கள் எல்லோருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டி ஊக்கப்படுத்தப்பட்டார்கள்.
மாணவ, மாணவிகளின் கலை,கலாசார, நடன நிகழு;வுகளும் இடம்பெற்றன. கலந்து கொண்ட அதிதிகள் பரிசுகளை வழங்கி வைத்தார்கள்.
0 comments :
Post a Comment