ஜெர்மனி - அமெரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை: சாதனை படைப்பரா குளோஸ்?

லக கோப்பை கால்பந்து தொடரில், இன்று நடக்கும் லீக் போட்டியில் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
இதில் ஜெர்மனி அணிக்கு தோமஸ் முல்லர், குளோஸ் கூட்டணி கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசிலியாவில் இன்று நடக்கும் ‘ஜி’ பிரிவு லீக் போட்டியில் பலம் பொருத்திய ஜெர்மனி அணி, அமெரிக்கா எதிர்கொள்கிறது.
போர்ச்சுகலுக்கு எதிராக வெற்றி பெற்ற ஜெர்மனி அணி, கானாவிடம் சமநிலை செய்தது.
கானாவை வீழ்த்திய அமெரிக்க அணி, போர்ச்சுகலிடம் சமநிலை செய்தது.

இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, 7 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு சென்றுவிடும். தோல்வி அடையும் அணியின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு, போர்ச்சுகல் – கானா அணிகள் மோதும் மற்றொரு போட்டியின் முடிவைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். ஒருவேளை போட்டி சமநிலையில் முடியும் பட்சத்தில், இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

கானாவுக்கு எதிரான ஒரு கோல் அடித்து, அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்ட மிராஸ்லாவ் குளோஸ், போர்ச்சுகலுக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த தாமஸ் முல்லர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குளோஸ் இன்று மீண்டும் சாதிக்கும் பட்சத்தில், உலக கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில், பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோவை பின்தள்ளி முதலிடம் பிடிக்கலாம். இவர்களை தவிர பொடோல்ஸ்கி, கேப்டன் பிலிப் லாம், ஹம்மல்ஸ், மரியோ கோட்ஜி, டோனி குரூஸ் உள்ளிட்டோரும் வெற்றிக்கு கைகொடுக்கலாம்.

போர்ச்சுகலுக்கு எதிராக ‘ஸ்டாபேஜ்’ நேரத்தில் வெற்றியை கோட்டைவிட்ட அமெரிக்க அணிக்கு கேப்டன் கிளின்ட் டெம்ப்சே நம்பிக்கை அளிக்கிறார்.

கானா, போர்ச்சுகலுக்கு எதிராக தலா ஒரு கோலடித்த இவர், இன்றும் கைகொடுக்கலாம். ஜான் அந்தோனி புரூக்ஸ், ஜெர்மைன் ஜோன்ஸ், பிராட் டேவிஸ், பேபியன் ஜான்சன், ஜூலியன் கிரீன் உள்ளிட்டோர் அசத்தும் பட்சத்தில், ஜெர்மனிக்கு நெருக்கடி கொடுக்கலாம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :