சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் கடமையாற்றும் உத்தியோகத்தரொருவர் அலுவலக வரவுக் குறிப்பேட்டில் கடமையை முடித்துக் கொண்டதாக பொய்யான நேரத்தை எழுதி கையொப்பமிட்டுவிட்டு கடமை நேரத்தில் கல்லூரியிலிருந்து வெளியேறிய சம்பவம் தொடர்பில் அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் எவரும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமை குறித்து தொழில்நுட்பக் கல்லூரியின் உத்தியோகத்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது:
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் கடமையாற்றும் மேற்படி உத்தியோகத்தர் தன்னுடைய கடமை நேரத்தில் - அடிக்கடி கல்லூரியை விட்டு வெளியேறுவதையும் கடமை முடியும் நேரத்துக்கு முன்பாகவே பிந்திய நேரத்தை வரவுக் குறிப்பேட்டில் பொய்யாக எழுதிவிட்டு வெளியேறிச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
அந்தவகையில் குறித்த உத்தியோகத்தர் நேற்றைய தினம் - அலுவலக வரவுக் குறிப்பேட்டில் பிற்பகல் 5.00 மணிக்கு கடமையை முடித்துச் செல்வதாக பொய்யாக எழுதி ஒப்பம் வைத்து விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
ஆயினும் இவர் கல்லூரியை விட்டு செல்லும்போது பிற்கல் 3.50 மணியாகும்.
இந்த விடயம் உடனடியாக கல்லூரியி அதிபரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுதது மேற்படி உத்தியோகத்தருடைய ஒப்பத்தின் கீழ் - உண்மையான நேரத்தினைக் குறிப்பிட்டு அதிபர் ஒப்பமிட்டுள்ளார்.
இந்த விடயம் உடனடியாக கல்லூரியி அதிபரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுதது மேற்படி உத்தியோகத்தருடைய ஒப்பத்தின் கீழ் - உண்மையான நேரத்தினைக் குறிப்பிட்டு அதிபர் ஒப்பமிட்டுள்ளார்.
இதேவேளைஇ குறித்த உத்தியோகத்தர் - வரவுக் குறிப்புப் புத்தகத்தில் சில பகுதிகளை இடைவெளியாக விட்டு விட்டே கையொப்பமிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இது விடயமாகஇ கல்லூரியின் உத்தியோகத்தர்கள் அதிபரிடம் முறையிட்டுள்ள போதும்இ இதுவரை குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளையும் அதிபர் மேற்கொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.
இதனையடுத்து இவ் உத்தியோகத்தர் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் முறையிடுவதற்கான முயற்சியொன்றினை சம்மாந்துறைப் பிரதேச பொது அமைப்புக்கள் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.
மேற்படி உத்தியோகத்தர் கல்லூரியை விட்டு இவ்வாறு விரும்பிய நேரத்தில் வெளியேறிச் செல்வதன் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சர்ச்சைக்குரிய மேற்படி உத்தியோகத்தர் - கடமை நேரத்தில் வேறொரு தொழிலில் ஈடுபட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment