முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் - ரிஷாத் பதியுதீன்


கொள்கைகள் வேறாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்ற வகையில் நாம் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாகும் என கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். 
 
பண்டாரவளை ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;-
முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது நாம் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும். எமது சமுதாய நலன் கருதி நானும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒன்றிணைந்து பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தோம். கொள்கைகள் வேறாக இருப்பினும் எமது சமுதாயமே மிக முக்கியம். எனவே, இவற்றினை கருத்திற் கொண்டு ஊவா மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது இன்றைய தேவையாகும். ஊவா மாகாணத்தில் 52ஆயிரம் வாக்குகளை கொண்ட முஸ்லிம்கள்  இன்று ஒருவரையேனும் மாகாண சபைக்கு அனுப்ப முடியாமல் இருப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
 
எனவே, எமது கட்சியினை சேர்ந்தவர்கள் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு ஒரு அமைச்சர், ஒரு பாராளுமன்றப் பிரதிநிதியைப் பெற்றது மாத்திரமல்லாது மூன்று மாகாண சபை பிரதிநிதிகளையும் சுமார் 15 பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்களையும் பெற்றுள்ளோம். இவை எமது ஒற்றுமையின் பலனாகும். இதே போன்று ஊவா மாகாணத்திலுள்ளவர்களும் சிந்தித்து உலமாக்களின் ஆலோசனைகளைப் பெற்று எதிர்வரும் தேர்தல்களில் வாக்களித்து எமது பிரதிநிதிகளை பெறுவது தான் காலத்தின் தேவையாகும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :