தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மட்டக்களப்பில் உரையாற்றிக் கொண்டிருந்த போது மயக்கமடைந்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள துளசி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடாத்திய அரசியல் கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜ உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது மயக்கமுற்ற அவர் கீழே விழுவதற்கு முற்பட்டார். நிலைமையை உணர்ந்த கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மேடைக்கு ஓடிச் சென்று அவரை தாங்கிப்பிடித்து மேடையில் படுக்க வைத்தனர். பின்னர் அவருக்கு நீர் அருந்தக் கொடுத்ததுடன், அவரின் முகத்தினை தன்னீரால் கழுவியபின்னர் மாவை சேனாதிராஜ எம்.பி. வழமை நிலைக்கு திரும்பினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இந்த கருத்தரங்கில் சுமார் 30 நிமிட நேரம் உரையாற்றிய பின்னரே இச்சம்பவம் இடம் பெற்றது. பின்னர் கூட்டம் தொடர்ந்தும் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இக்கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பி. அரியநேந்திரன் மற்றும் சி.யோகேஸ்பரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment