இஸ்லாம் மார்க்கம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது- அதிபர் கேணல் திசாநாயக்க



அஷரப் ஏ சமத்-

லகத்திலே சிறந்ததொரு மார்க்கம் இஸ்லாம் மார்க்கமாகும். முகம்மத் நபி (ஸல்) அவர்கள் இந்த உலகில் மனிதன் சீராக வாழ்வதற்கு ஒரு சீரிய வாழ்க்கைமுறையை காட்டித் தந்துள்ளார்கள்.. இஸ்லாம் மார்க்கம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. என கொழும்பு டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி அதிபர் கேணல் திசாநாயக்க மேற்கண்டவாறு உரையாற்றினார்.

கொழும்பு டி.எஸ்.சேநாயக்க கல்லூரியில் பயிலும் முஸ்லிம்மாணவர்களது 35வது இஸ்லாமிய தின நிகழ்வு கல்லூரி ஆர.ரீ.அலஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சர் றிசாத் பதியுத்தீன் கலந்து கொண்டார்.

மாணவர்கள் இஸ்லாமிய நாடகம் ஹசீதா பேச்சுப்போட்டிகள் மேடையேற்றப்பட்டன போட்டிகளில் வெற்றி பொற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளிப்பாடசாலை மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் பதக்கம் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

திருமதி தஸ்லீமா அமீன், இஸ்லாமிய பொறுப்பாசிரியர் எப்.எம் பிர்தௌஸ் ஆகியோறும் கலந்து விருதுகளை வழங்கிவைத்தனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் - 

கொழும்பு டி.எஸ்.சேநாயக்க கல்லூரியில் தற்பொழுது 7000 ஆயிரம் மாணவ சமுகங்கள் கற்கின்றனர் சகல மதங்களையும் கொண்ட மாணவ சமுகம் ஒரு குடையின் கீழ் நின்று சகல இனங்களின் ஜக்கியத்தையும் கட்டிக்காக்கும் ஒரு பாடசாலையாக டி.எஸ. சேநாயக்க கல்லூரி இயங்குகின்றது.

இந்தக் கல்லூரியில் 60க்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. ஆனால் முஸ்லீம் மாணவர்களுடைய இஸ்லாமிய சங்கம் மிகச் சிறப்பாகவும் ஒரு முன்மாதிரியகாவும் இயங்குகின்றது. அண்மையில் வறிய மாணவர்களுக்கும் மற்றும் வலதுகுறைந்தவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும உதவிகளை வழங்கினார்கள். இந்த கூட்டமண்படத்தினை திருத்தியமைப்பதற்கும் இஸ்லாமிய சங்கம் நிதி வழங்கினார்கள்.

அமைச்சர் றிசாத் பதியுத்தீன் உரையாற்றுiகியில் -

47 வருட கால வரலாற்றைக் கொண்ட இக் கல்லூரி தலைநகரில் சகல சமுத்தில் இருந்தும் சிறந்ததொரு கல்விச் சமுகத்தை உருவாக்கி வருகின்றது. இக் கல்லூரியை உருவாக்கிய ஆர்.ரீ. அலஸ் அவர்கள் சிறந்ததொரு கல்விமாண் ஆகவே இக் கல்லூரியில் கற்கும் மாணவர்கள் அவரது அடிச்சுவட்டை பின்பற்றி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.

எமது மார்க்கம் இஸ்லாம் கல்வியை முதன்மைபடுத்தியுள்ளது. அல் குர்ஆணில் முதல் வசனமான ஓதுவீராக படிப்பீராக என சொல்லியது சகலதுறைகளிலும் மாணவர்கள் அக்கரை செலுத்தி அத்துறையில் முன்னேர வேண்டும். நாம் வைத்தியராகவோ, இண்ஜினியராகவோ வந்தாலும் பயணில்லை நாம் சிறந்த ஒழுக்கமாணவர்களாக வளராவிட்டால் அக் கல்வியில் பயணில்லை.ஆகவே நாம் சிறந்த ஒழுக்கசீலராக சிறந்து விளங்க வேண்டும். என அமைச்சர் வேண்டிக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :